கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது, தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு அவசரமாக சிகிச்சையளித்தல், ஒட்சிசன் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி, 21 யோசனைகளை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளது.
சுகாதார மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்கும் வகையிலேயே இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், நேற்றையதினம் இடம்பெற்ற 45 நிமிட சந்திப்பின் போதும், இந்த 21 யோசனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடலுக்குப் பின்னரே, ஜனாதிபதி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொரொனா தொற்றின் காரணமாக பெருமளவானோர் மரணித்துள்ளனர். பொருளாதாரமும் நாளுக்கு நாள் சீர்குலைந்துகொண்டே வருகின்றது. இந்நிலையில், மேற்கண்ட யோசனைகள் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
- கொரோனா தொற்றுக்கு முகங்கொடுப்பதற்காக, இராணுவம் மற்றும்
நிர்மாண நிறுவனங்களின் உதவியுடன் தற்காலிக வைத்தியசாலைகள்,
கட்டில்களை நிர்மாணித்தல். - சுவாசிப்பதற்கு சிரமப்படும் நோயாளர்களுக்கு உடனடியாக ஒட்சிசன்
வழங்கும் வெண்டிலேட்டர் பெற்றுக்கொள்வதற்கும், ஒட்சிசனின்
அளவை கூட்டிக்கொள்வதற்கும் சர்வதே ஒத்துழைப்பை
பெற்றுக்கொள்ளல். அதற்கான விமானச் சேவைகளை தயார்படுத்தல். - சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு, ஓய்வுபெற்ற
வைத்திய துறையினர், தனியார் துறையினர், ஆகியோரின்
ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளல். - தடுப்பூசி வழங்கல் செயற்பாட்டை துரிதப்படுத்துவதுடன்,
தற்போதையை முறைமையை கைவிட்டு அவசர கொள்முதல்
செயற்பாட்டை முன்னெடுத்தல். - 12 வயதுக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்புடன்
தடுப்பூசியை ஏற்றும் செயற்பாடுகளை துரிதப்படுத்தல். - தடுப்பூசி ஏற்றலை துரிதப்படுத்தும் அதேவேளை, வைத்திய
துறையினரிடமிருந்து அதற்கான கால எல்லையை பெற்றுக்கொள்ளல். - பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்தல்
- சுகாதார தரப்பினருக்கு ஒவ்வொரு நாளும் பி.சி.ஆர்
பரிசோதனைகளை முன்னெடுக்கும் அதேவேளை, தனிப்பட்ட
பயன்பாட்டுக்காக சுகாதார உபகரணங்களை வழங்குதல். - கொரோனா மரணங்கள் தொடர்பில் சரியான தகவல்களை பேணுதல்.
- கொரோனா செயலணிக்கு சட்டரீதியில் அங்கிகாரம் இல்லை
என்பதால், அதனை கலைத்துவிட்டு அனர்த்த முகாமைத்துவ சபையை
ஸ்தாபித்தல். அதனூடாக அமைச்சரவை செயற்படவேண்டும். - அமைச்சரவைக்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக, உலக சுகாதார
ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் அடங்கிய விசேட
ஆலோசனை குழுவை நிறுவுதல். - சுகாதாரம் தொடர்பிலான பாராளுமன்ற செயற்குழுவை வாரத்துக்கு
ஒருதடவை கூட்டுதல். - கொவிட்-19 தொடர்பிலான சகல செயற்பாடுகளுக்குக்கும்
வைத்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அதற்கு
இராணுவக் குழு உள்ளிட்ட ஏனைய குழுக்கள் ஒத்துழைப்பு
நல்கவேண்டும். - எதிர்க்கட்சியினால் சமர்பிக்கப்பட்டுள்ள மக்கள் சுகாதார சட்டமூலத்தை
அவசர சட்டமூலமாக கருதி, அதனை பாராளுமன்றத்தில்
நிறைவேற்றவேண்டும். - சர்வதேச நாணய நிதியத்தில் நிதியை பெற்று, அதனை இந்நாட்டின்
சுகாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தவேண்டும். 800 மில்லியன்
அமெரிக்க டொலரில், தடுப்பூசியை பெற்றுக்கொள்ளல் மற்றும்
கொரோனா செலவுகளுக்கு பயன்படுத்தலாம். - நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்வதற்காக, சர்வதேச
நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். - நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அரச, தனியார் துறைகளில்,
பணியாற்றுவோர் வீடுகளில் இருந்தே பணியாற்றும் முறைமைக்கு
தொடர்ந்தும் அனுமதியளித்தல். - பொதுப் போக்குவரத்து சேவைகளை அரைக்கு அரைவாசியாக
குறைத்து, அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு
அனுமதியளித்தல். - தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாத சகல சுற்றுலாப்பயணிகளும்
நாட்டுக்குள் நுழைந்துவிடாது நாட்டின் எல்லைகளை மூடிவிடுதல். - பிள்ளைகளின் கல்வித் தொடர்பில் கவனம் செலுத்தல், மீண்டும்
பாடசாலைகளை ஆரம்பித்தல், சகலருக்கும் சமமாக கல்விக்
கிடைப்பதற்கு சந்தர்ப்பத்ததை ஏற்படுத்தி கொடுத்தல். - கொவிட்-19 செலவுகளை கண்காணிப்பதற்காக, தனியாக வரவு-
செலவை நிறுவவேண்டும். அது பாராளுமன்றத்துக்கும்,
அமைச்சரவைக்கு பொறுப்புகூறவேண்டும். மேலே குறிப்பிட்ட யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அதற்கு
அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.