கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் இன்று முதல் அமுலாகும் வகையில் புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில் எதிா்வரும் 31ம் திகதி வரையில் பல்வேறு அம்சங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் உடற்பயிற்சிக் கூடங்கள், உடற்கட்டமைப்பு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள், சிறுவர் பூங்காக்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், கடற் கரையோரங்களில் ஒன்றுகூடுவதற்கும் நீச்சல் தடாகங்களை பயன்படுத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வேலை மற்றும் மருத்துவ சேவை பெறுபவர்கள் தவிர வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் புகையிரதம் மற்றும் பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு அளவான பயணிகள் ஏற்றப்படுவதுடன், மாகாண எல்லைகளுக்குள்ளேயே பயணத்தில் ஈடுபடவேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது