177
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (20.08.21) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதுடன், இது தொடர்பான அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
- சுகாதார சேவைகள்
- பொலிஸ் நிலையங்கள்
- கிராம அலுவலகர்கள்
- அனைத்து துறைகளைச் சேர்ந்த களவிஜய அதிகாரிகள்
- உள்ளுராட்சி அமைப்புக்கள் ( தேவையான ஆளனியுடன் இயங்க முடியும்)
- நாளாந்த பயன்பாட்டுக்கான தேவைகள் (மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு விநியோகம், எரிவாயு விற்பனை நிலையம், பெற்றோல் நிரப்பு நிலையம், மோட்டார் சைக்கிள் திருத்துமிடம், சாலை ,கட்டுமானப் பணி)
- விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ( மாவட்ட எல்லைகளைத் தாண்டாது)
8.பலசரக்கு கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஒன்லைன் விநியோகத்தில் செயற்படல்
- அத்தியாவசியப் பொருட்கள் விநியோகஸ்தர்கள்
10.வெதுப்பகங்கள் (நடமாடும் விற்பனை)
- வங்கிகள் (மட்டுப்படுத்தப்பட்ட நிதி பரிவர்த்தனை)
- போக்குவரத்து – அத்தியாவசிய / பிற அனுமதிக்கப்பட்ட, நோயாளிகளின் அவசர தேவை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்
- இறுதிச் சடங்குகள் – 24 மணிநேரத்தில் மேற்கொள்ளுதல், குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் (கொரோனா அற்ற மரணங்களின் போது மாத்திரமே)
- ஓரே நேரத்தில் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற அனுமதிக்கப்படுவர்
- 65 வயதிற்கு மேற்பட்டோர், நாற்பட்ட நோயாளிகள் மருத்துவ தேவைகளை தவிர்த்து வெளியில் செல்ல முடியாது
- தனிப்பட்ட கூட்டங்களை நடாத்த முடியாது
- தினசரி ஊழியம் பெறும் தொழிலாளிகள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்
- சுற்றுலா தொடர்பான செயற்பாடுகளுக்கு மேலே இருந்து விலக்கு அளிக்கப்படும்
- மாவட்ட, உள்ளூர் கொரோனா ஒழிப்பு குழுக்களால் தீர்மானக்கப்பட்ட முடிவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
Spread the love