157
யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 5 பேருக்கே கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் மருதடி லேனைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் சங்கானையைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் கொக்குவிலைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர்
Spread the love