ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் 13 போ் உயிாிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதனை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.
குண்டுவெடிப்பில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை யாா் நடத்தியது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
விமான நிலைய வளாகத்திலோ அதன் வெளியிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என மேற்கு நாடுகள் இன்று காலையில் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது இவ்வாறு குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.