152
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள தற்போதய சூழலில் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட அதே வேளை கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட புலோலி, வராத்துப்பளையில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக மக்கள் வழங்கிய இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்தைப் பருத்தித்துறை காவல்துறையினா் சுற்றிவளைத்தனர்.
இதன் போது 11 லீட்டர் கசிப்பினை விற்பனைக்காக வைத்திருந்த 26 வயதுடைய சந்தேகநபரை சான்றுப் பொருளுடன் கைதுசெய்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love