160
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணிக்கும் இடையில் இன்று (27.08.21) நடைபெற்ற கூட்டத்தின்போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எதிர்வரும் 30 ஆம்திகதிவரை அமுல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
இந்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம்திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Spread the love