கொழும்பு மாவட்டத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் டெல்டா பிறழ்வு பரவியுள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவந்திர தொிவித்துள்ளாா்.
இந்த நிலையில், இலங்கையில் சுப்பர் டெல்டா பிறழ்வு பரவியுள்ளது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது எனத் தொிவித்துள்ள அவா் எனினும், தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் வேகம் அதிகரித்துள்ளனால், செப்டெம்பர் மாதமளவில் நல்ல பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளாா்.
இதேவேளை, டெல்டா பிறழ்வு நாடளாவிய ரீதியில் பரவியுள்ளது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்