இலங்கை பிரதான செய்திகள்

REGN-COV2 மருந்து? அரசியல் அழுத்தத்தால் கிடைக்காமல் போனதா?

கொரோனா நோயாளிகளுக்காக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட REGN-COV2 மருந்துக்கு இலங்கை மருத்துவர்களும் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர்.

ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில், அதிக ஆபத்துள்ள கொரோனா தொற்று உள்ளவர்களின் உயிரைக் காப்பாற்ற இந்த மருந்து உதவும் என்று பரிந்துரைத்தார்.

மருந்தை எடுத்துக்கொள்ளும் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு எனவும், இந்த மருந்து இதய நோய் மற்றும் தொற்றுநோய்களின் தாக்கத்தை குறைக்கும் என்றும் கலாநிதி சந்திம ஜீவந்தர கூறுகிறார்.

எனினும் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இருந்தும் அரசியல் அழுத்தத்தின் காரணமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருந்தை இறக்குமதி செய்ய உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடம் ஒரு தனியார் நிறுவனம் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு இருந்தாலும் எப்படி திடீரென இந்த ஒப்புதல் ரத்து செய்யப்பட்டது என்றும் இலங்கை சுகாதாரத் துறையிடம் சிங்கள ஊடகம் கேள்வி எழுப்பி உள்ளது.

இதற்கு மருந்தின் அதிக விலை காரணமாக இந்த மருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் பதிலளித்துள்ளார். அந்த வகையில் REGN-COV2 மருந்தின் ஒரு டோஸ் சுமார் ஒரு இலட்சத்து 27,000 எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.