’96’ படத்தின் கூட்டணியான விஜய் சேதுபதி – பிரேம் குமார் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘96’.
ஒளிப்பதிவாளரான சி.பிரேம்குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்துக்காக கோவிந்த் வசந்தா உருவாக்கிய பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தற்போதும் இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். பள்ளிக்கால காதலைப் பற்றிய இந்தப் படம், காதலர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. எனவே, இந்தப் படம் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் மீள்உருவாக்கம் செய்யப்பட்ட போதும் தமிழில் பெற்ற வெற்றி அளவுக்கு இதர மொழிகளில் வெற்றி பெறவில்லை.
இந்தநிலையில் தற்போது பிரேம் குமார் தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டதாகவும் அதிலும் விஜய் சேதுபதியே நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய நண்பர்களான இருவரும் இது தொடர்பாகப் பேசியுள்ளனர் எனவும் தான் ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு விஜய் சேதுபதி நடிப்பாா் அல்லது அவற்றுக்கிடையிலேயே திகதிகள் ஒதுக்கி நடிப்பாா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது