162
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உள்பட மாவட்டத்தில் மேலும் ஐவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
நல்லூரைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும், நெல்லியடியைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரும், சுன்னாகத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் உள்பட இருவர் இன்று காலை உயிரிழந்திருந்தனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 236ஆக உயர்வடைந்துள்ளது.
Spread the love