அச்சுவேலி பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை (டிப்போ) சாலையில் பேருந்து (750/751 வழித்தட) சாரதியாக பணியாற்றும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மதனராசா (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி நாவற்காட்டு பகுதியில் உள்ள வயலில் இன்றைய தினம் வியாழக்கிழமை உழுது கொண்டிருந்த வேளை மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.