237
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஒருமுகத் திருவிழா நடைபெற்றது. மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து வேல் பெருமான் பெரிய குதிரை வாகனத்திலும் , வள்ளி , தெய்வானை தலா மூன்று குதிரைகள் பூட்டிய இரு குதிரை வாகனங்களில் எழுந்தருளில் உள்வீதி யுலா வந்தார்.
அதேவேளை நல்லூர் மகோற்சவ திருவிழாவின் சப்பர திருவிழா நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்கும் தேர்த்திருவிழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கும், மறுநாள் திங்கட்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love