நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் காவற்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர், இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முஹமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என நியூசிலாந்து பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இவர் தொடர்பாக இலங்கை குற்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரனையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.
காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த அதிபரான சம்சூதீன் முஹமது இஸ்மாயில் சரிதா தம்பதிகளுக்கு 1989ஆம் ஆண்டு கடைசி மகனான முஹகமது சம்சூதீன் ஆதில் பிறந்துள்ளார்.
அவருக்கு ஒரு சகோதரியும் 2 சகோதர்கள் உள்ளனர். 4 பேரை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஆதில் ஆரம்பகட கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்றுள்ளார். இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக குடும்பத்துடன் 1998 ஆம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் தங்கியிருந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ. உயர்தரம் கல்வி கற்று 2006 ஆம் ஆண்டு பரீட்சை எழுதிய பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்று குடியேறியுள்ளார்.
மாளிகாவத்தை அல் ஹிதாய பாடசாலையில் இருந்து 2008ல் ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலை அதிபராக கடமையற்றி வந்த இவரின் தந்தையார் வெளிநாட்டில் குடியேறி வாழ்ந்துவரும் அவரது மகளுடன் வாழந்துவருகின்றார்.
ஆதிலின் ஏனைய இரு சகோதரர்களும் திருமணமாகி மத்திய கிழக்கில் வாழ்ந்து வருகின்றனர். கொலன்னாவையில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ள தாயார்., காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள தனது வீட்டில் வசித்துவருகின்றார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான முஹமது சம்சூதீன் ஆரிப் நியூசிலாந்தில் குடியேறிய பின்னர் அவர் அங்கு பல்வேறு குற்றச் செயல்காரணமாக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளதை நியூசிலாந்து காவற்துறையினர் கண்டுபிடித்து அவரை பின் தொடர்ந்துள்ளனர். இந் நிலையிலேயே அந்நாட்டு காவற்துறையினரால் ஆதில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆதில், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்பில், அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் என இலங்கை காவற்துறை தரப்பில் தெரிவிக்க்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து காத்தான் குடியில் விசாரணைகள் ஆரம்பம்!
நியுசிலாந்தின்- ஒக்லாந்து நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் வைத்து, சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில், குற்றவிசாரணைப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபருடன், இலங்கையில் நெருங்கிப் பழகியவர்களிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (3.09.21) ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையரான மொஹமட் சம்சுதீன் ஆதில் என்ற 32 வயதுடைய சந்தேகநபர், ஒக்லாந்து நகரிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து, அங்கிருந்த பலர் மீது கத்திக்குத்து தாக்குதலை முன்னடுத்த போது, ஆறு பேர் காயமடைந்தனர். எனினும் நியுசிலாந்து காவற்துறையின் உடனடி நடவடிக்கையில், சம்பவ இடத்திலேயே இவர் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.