பிரபல சிங்கள பாடகரும் இசைக்கலைஞருமான சுனில் பெரேரா காலமானார்.
68 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து அண்மையில் வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், நியூமோனியா நிலை காரணமாக நேற்று (05) மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (06.09.21) அதிகாலை உயிரிழந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.