
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதடி முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோண்டாவிலைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 307ஆக உயர்வடைந்துள்ளது
Spread the love
Add Comment