நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகியவர், மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்காக, தன்னுடைய தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியில் இருந்து, ஜயந்த கெட்டகொட விலகினார்.
இந்நிலையில், மற்றுமொரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அஜிட் நிவாட் கப்ரால், தன்னுடைய பதவியில் இருந்து விலகவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அஜிட் நிவாட் கப்ராலின் வெற்றிடத்துக்கே, ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.