ஜப்பானின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு ஏவுகணையை வட கொரியா இன்று திங்கட்கிழமை பரிசோதித்துள்ளதாக வடகொரியாவின் செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ உறுதிப்படுத்தியுள்ளது. க்ரூஸ் என அழைப்படும் இந்த ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமெரிக்க ராணுவம் தொிவித்துள்ளதுள்ளது.
அதேவேளை வடகொரியா சோதனை செய்த ஏவுகணை குறித்து, அமெரிக்க உளவு அமைப்புகளோடு இணைந்து ஆய்வு செய்து வருவதாக தென்கொரியாவின் யோன்ஹப் செய்தி நிறுவனத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
வடகொரியா அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த வாரம் சந்தித்து பேச உள்ளமை குறிப்பிடத்தக்கது.