கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் இயற்றாலை பகுதியை சேர்ந்த ராஜன் சிந்துஜன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இயற்றாலை பகுதியில் இன்றைய தினம் இரவு 09.30 மணியளவில் குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.