நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இந்த மாதம் 21ஆம் திகதி அதிகாலை வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரண தொிவித்துள்ளாா்.
இந்த உத்தரவால் நாட்டில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், ரடங்கு உத்தரவு தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் உரிய முறையில் அறிவிக்கப்படும் எனவும் ஊரடங்கு உத்தரவினை நீக்குவது குறித்து, கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணியின் தீர்மானத்துக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
நேற்றையதினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பெயரளவில்
இருப்பதுடன், இதனால் சிறிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர் என,ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.