ஜனநாயகம் ஆபத்துக்குள்ளான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் துரதிஷ்டவசமாக உள்ளடங்கியுள்ளது எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், அதில் குற்றிப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் 90 சதவீதமானவை நிகழ்கால விடயங்களாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமைகள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் முன்வைத்த
அறிக்கைக்கு அமைய, உலகின் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (15.09.21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தொடர்ந்து தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர், இந்த முகாமினரின் ஆட்சிக் காலத்தில் இலங்கை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினையை மு ஐ.நா வில் ன்வைக்கும் போது, அது தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினை என அடையாளப்படுத்தினர்.
பின்னர் தேசாபக்தி தொடர்பில் கதைத்து தெற்கு மக்களிடம் அதற்கு எதிரான
நிலைப்பாடொன்றை தோற்றுவிக்க முயற்சித்தனர். ஆனால் இன்று அவர்களால் அதனை
செய்யும் வாய்ப்பு இல்லாமற் போயுள்ளது.
ஐ.நாவில் தற்போது முன்வைக்கப்படும் பிரச்சினைகள், இலங்கையில் இடம்பெற்ற சிவில்
யுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினை அல்ல. 90 சதவீதமானவை நாட்டில் தற்போது
இடம்பெறும் பிரச்சினைகளுடன் தொடர்புடையது எனக் கூறியுள்ளார்.
இலங்கைப் பிரஜைகளின் உரிமைகளை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது
ஆணையாளரோ தலையிட்டால் அது எமது நாட்டுக்கு கௌரவமான செயல் அல்ல. அது
அகௌரவத்தை ஏற்படுத்தும் செயல் எனக் குறிப்பிட்ட அவர், இத்தாலியில் இலங்கையர்கள் கறுப்புகொடியை ஏற்றி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். எனவே இலங்கையர்களை அவ்வாறான நிலைக்கு இந்த அரசாங்கமே தள்ளுகின்றது என தெரிவித்துள்ளார்.