Home இலங்கை திலீபனின் நினைவேந்தலை நினைகூரத் தடை

திலீபனின் நினைவேந்தலை நினைகூரத் தடை

by admin

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை நினைகூருவதற்கு  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை மேஜர் தியாகராசா சரவணபவன், தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன்,  பேரின்பராசா ஜனகன், சுவீகரன் நிசாந்தன் ஆகிய 4 பேருக்கு எதிராகவே நேற்று புதன்கிழமை (15) இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

குறித்த நால்வரும் திலீபனின் நினைவு கூரும் நடவடிக்கையை நேற்று 15ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதிவரை மேற்கொள்ள உள்ளதாக காவல் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொ.ப.கஜநாயக்கா மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்ததனையடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றால் இதற்கு எதிரானவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவாய்ப்பு இருப்பதுடன் நாட்டில் தற்போது கொரோனா நோய் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் இவ்வாறான நினைவு கூரல் நடவடிக்கையை நடைபெறாமல் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினா் மன்றுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தனா்

இதனையடுத்து 1979ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச்சட்டகோவையின் பிரிவு (106)1 கீழ் காவல்துறையினாின் கோாிக்கைக்கேற்ப நீதிமனற்ம் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நீதிமன்ற தடை உத்தரவுனை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக காவல்துறையினா் தெரிவித்தனர் 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More