156
எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதி முதல் பிாித்தானியாவின் கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உட்பட எட்டு நாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு போக்குவரத்து இராஜாங்க செயலாளர் Rt Hon Grant Shapps நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளாா்.
பாகிஸ்தான், இலங்கை, ஓமான், பங்களாதேஷ், கென்யா, துருக்கி, எகிப்து மற்றும் மாலைதீவு ஆகிய எட்டு நாடுகளே இவ்வாறு பிாித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love