இலங்கை பிரதான செய்திகள்

திருட்டுப்பழி- 14 வயது சிறுவன் தற்கொலை?

மன்னார் -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை  சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை (17) மாலை தூக்கிட்ட  நிலையில் அவருடைய சடலம் அவரது வீட்டின் சாமி அறையில் மீட்கப்பட்டுள்ளது.

 கள்ளியடியில் உள்ள  கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாக குறித்த சிறுவன்  தற்கொலை?  செய்துள்ளதாக  தெரிய வருகிறது. 

-குறித்த சம்பவம் தெடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை  சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடப்பட்டதாக அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன்  சிறுவனின் நண்பரிடத்தில் கூறிய போது அவர் எடுத்திருந்தால்  பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளனர்.

பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவனை தாக்கியதாகவும் சிறுவனின் தாய் தாக்க முயன்றவர்களின் காலில் விழுந்து கதறியதாகவும் இருந்தாலும் சிறுவனை  தொடர்ந்து தாக்கி விட்டு   சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு  தாயார் குளித்து விட்டு வந்த நேரம் தாக்கியவர்கள் மறுபடியும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்த தாயார் ஓடி வந்து பார்த்த போது  மகன் தூக்கில் தொங்கிய  நிலையில் இருந்ததாகவும் தாயார் தெரிவிக்கின்றார்.

 இது தற்கொலை அல்ல எனவும் மகன் தற்கொலை செய்யுமளவுக்கு விபரம் தெரியாதவர் எனவும் தாய் தெரிவிக்கின்றார்.

 குறித்த சிறுவனின்  மரணம்  தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.   மேலதிக விசாரணைகளை இலுப்பைகடவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.