கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 1 4ஆவது ஐபிஎல் தொடர் இன்று (செப்டம்பர் 19) ஐக்கிய அமீரகத்தில் மீண்டும் ஆரம்பமாகின்றது சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமான ஐபில் போட்டி இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சமடைந்ததன் காரணமாக மே 3ஆம் திகதியுடன் போட்டி நிறுத்தப்பட்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
மீதமுள்ள ஆட்டங்களை நடத்த முடியாமல் போனால் சுமாா் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என்று கருதிய இந்திய கிரிக்கெட் வாரியம், அதை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றியது. அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் இன்று முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை எஞ்சிய 31 போட்டிகள் நடப்படவுள்ளன.
இந்தநிலையில் டுபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் போட்டியிடவுள்ளன. மும்பையை வீழ்த்தி ஆறாவது வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் சென்னையும் மும்பை அணி ஐந்தாவது வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது