ஆபத்தான பாரிய வைரஸ் ஒன்று நாட்டுக்குள் புகுந்துள்ளது. இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்து உள் நுழைந்ததாக தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அந்த பாரிய வைரஸே நாட்டிலுள்ள தலைமைத்துவம் என்பதை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்..
நேற்று(20.09.21) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மக்களை பாதுகாக்கவே உலக நாடுகள் தடுப்பூசி ஏற்றும் நிலையில், இலங்கையில் அரசாங்கத்தைப் பாதுகாக்கவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த வைரஸை இல்லாமல் செய்யவே தாம் செயற்படுவதாகக் கூறிய அவர், இந்த வாரம் அதற்கான நடவடிக்கையை முன்னடுக்கவுள்ளதாகவும், அதற்கமைய, நாட்டுக்குள் பிரவேசித்துள்ள வைரஸ்களை ஒவ்வொன்றாக இல்லாமல் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் ஏற்பட்டுள்ள வைரஸ், கொமிஸ் வைரஸ், யானை வர்த்தக வைரஸ் ,
உரத்தால் ஏற்பட்டுள்ள வைரஸ் இவை எல்லாவற்றிலும் ஊடாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள வைரஸ்
பாரதூரமானது.
இலங்கைக்குள் பிரவேசித்துள்ள சகல வைரஸ்களும் வெளிநாடுகளிலிருந்தே வந்துள்ளன என்பதை மீண்டும் மீண்டும் நினைவு கூறுவதாகத் தெரிவித்த அவர், நிதியமைச்சர், ஜனாதிபதி மற்றும் கொரோனாவும் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ள வைரஸ்களாகும். இவை அனைத்தும் ஒரே
மாதிரியான வைரஸே என வலியுறுத்தி உள்ளார்.
இன்று இலங்கையில் இந்த அரசாங்கத்தை உண்மையில் வழிநடத்துவது யாரென தெரியவில்லை.
அதைவிட இந்த நாட்டை வழிநடத்துவது யாரென தெரியவில்லை. சில வேளைகளில் யார் தீர்மானங்கள் எடுக்கிறார்கள் என சுகாதாரப் பிரிவினருக்கோ பாதுகாப்பு தரப்பினருக்கோ தெரியவில்லை. இன்று வரை மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கியது யாரென தெரியவில்லை.
அமைச்சரவையின் அமைச்சரான நாமல் கூட தனக்கும் தெரியவில்லை என கூறுவதாக ஹரீன் பெர்ணான்டோ சுட்டிக்காட்டி உள்ளார்.