177
வெலிக்கடை சிறைச்சாலைக்கு இந்த மாதம் 12ஆம் திகதி தான் சென்றதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஆனால் தான் சிறைச்சாலைக்கு செல்லும் போது பெண் ஒருவரையோ அல்லது நண்பர்களையோ அழைத்துச் செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள தூக்குமேடையை பரிசோதிக்கவே தான் சென்றதாக தெரிவித்துள்ள அவர், இதன்போது தான் மதுபோதையில் இருக்கவில்லை என்றும், தான் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றதாகக் கூறப்படும் புஷ்பிக்கா என்ற பெண்ணை தனக்கு யாரென்றே தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
Spread the love