
யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியரின் வீட்டில் இரவு வேளையில் திருட்டில் ஈடுபட்டவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான ஐபாட் மற்றும் இரண்டு ஐ போன் என்பன கைப்பற்றப்பட்டன என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த திருட்டுச் சம்பவம் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் அரியாலையைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியர் வீட்டில் வசித்து வரும் நிலையில் அவர்கள் இரவு சாப்பாட்டை எடுத்துக் கொண்ட போதும் வீட்டின் முன் கதவைத் திறந்து ஐபாட், 2 ஐபோன்கள் மற்றும் சவுண்ட் சிஸ்ரம் என்பன திருடப்பட்டன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையிலேயே சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஐபாட் மற்றும் இரண்டு ஐ போன் என்பன கைப்பற்றப்பட்டன என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.
Add Comment