221
தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்ற குழந்தை குறித்த இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் இயந்திரத்தை செலுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளம காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love