அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த 23 வயதான மாற்றுத்திறனாளியான சீயோன் கிளார்க் (ZionClark) 4.78 செக்கன்களில் 20 மீற்றரை கைகளால் விரைவாக நடந்து சாதனை படைத்துள்ளார். இதற்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
இரு கால்களை இழந்தாலும், தன்னம்பிக்கையால் தனது உடலை வளர்த்துள்ள அவா் உடலின் கீழ் பாகம் இல்லாமல் மேல் பாகங்களை மட்டும் வைத்து இந்த சாதனையை படைத்துள்ளார்
மல்யுத்த மற்றும் சக்கர நாற்காலி பந்தய வீரரான இவாின் குறிக்கோள்ள 2024 ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தய விளையாட்டுகள் இரண்டிலும் பங்கேற்கும் முதல் அமெரிக்க தடகள வீரராக வேண்டும் என்பதாகும்.
இவரது வீடியோ இதுவரை யூாியூப்பில் 2,354,879 பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.