மொரோக்கோ, அல்ஜீரியா, துனிசியா மூன்று நாட்டவருக்கும் வீஸா குறைப்பு!
அல்ஜீரியா, மொரோக்கோ, துனிசியா ஆகிய மூன்று அரபு நாடுகளினதும் பிரஜைகளுக்கு வீஸா வழங்குவதில் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப் படும் என்று பிரான்ஸ் அறிவித்திருக்கிறது.
பிரான்ஸில் தீவிரவாதச் செயல்கள் மற்றும் குற்றங்களில் தொடர்புடைய தங்களது பிரஜைகளைப் பொறுப்பேற் பதற்கு அந்த மூன்று நாடுகளும் பின்னடித்துவருகின்றன. அதனை அடுத்தேபிரான்ஸ் அரசு இவ்வாறு வீஸா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால்ஈரோப்-1 தொலைக்காட்சிக்கு பதிலளிக்கையில் “இதற்கு முன்னர் எடுத்திராத மிகக் கடினமாக ஒரு நடவடிக்கை இது”என்று தெரிவித்திருக்கிறார்.
மூன்று நாடுகளிலும் இருந்து விண்ணப்பிப்பவர்களில் அரைவாசிப் பேருக்கே இனிமேல் வீஸா அனுமதி வழங்கப்படும்எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் அரசின் வீஸா குறைப்புத் தீர்மானத்துக்கு அல்ஜீரிய தனது கடும் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறது. அல்ஜீரியாவுக்கான பிரான்ஸின் தூதர் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுஅவரிடம் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பிரான்ஸினுள் நுழைவோரையும் குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்களையும் திருப்பிப் பொறுப்பேற்பது சம்பந்தமாகப் பிரதமர் மற்றும்உள்துறை அமைச்சர் ஆகியோர் மூன்று நாடுகளுக்கும் விஜயம் செய்து பல தடவைகள் பேச்சு நடத்தியிருந்தனர். ஆனால் திருப்பி அனுப்புவோரைப் பொறுப்பேற்கும் விடயத்தில் மூன்று நாடுகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.
29-09-2021