தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் பின்னர் கடைபிடிக்க வேண்டிய புதிய சுகாதார நடைமுறைகள் வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மத வழிப்பட்டுத்தளங்களில் கூட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபட முடியாது என்பதுடன் நிகழ்வுகள் , கூட்டங்களை நடத்துவற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்குள் பேருந்து சேவைகள் நடைபெறும் என்ற போதிலும் பேருந்துகளில் பயணிகள் அமர்ந்திருந்து மட்டுமே பயணிக்க முடியும். பதிவு திருமணங்களில் : ஐவர் பங்கேற்கலாம் என்பதுடன் பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்புகளை மேற்கொள்ள முடியாது
மேலும் உணவுவிடுதிகளுக்கு அனுமதி இல்லை என்பதுடன் மரண வீட்டில் ஒரே தடவையில் 10 பேரும் .உடற்பயிற்சிக் கூடங்களில் ஐவரும் பங்கேற்கலாம். மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.