171
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கான பேருந்து சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த அறிவிப்பை இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தலைமை முகாமையாளர் செ.குணபாலசெல்வம் அறிவித்துள்ளார்.
இந்தப் பேருந்தில் பயணிக்கும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்கள் தங்களது திணைக்கள அடையாள அட்டையை வைத்திருக்கவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உத்தியோகத்தர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்
Spread the love