158
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் இராசாவின் வீதி – ஸ்ரான்லி வீதி சந்திக்கு அருகில் , இராசாவின் வீதியின் குறுக்காக வடிகால் கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் , குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரையில் தடைப்பட்டு இருக்கும்
அதனால் மாற்று வீதிகளின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளுமாறும் , அதனால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Spread the love