181
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 5 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பலுசிஸ்தானின் ஹர்னய் பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.9 அளவாகப் பதிவாகி உள்ளது . குறித்த பகுதியில் ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள நிலையில் பெருமளவு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவசரகால மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் தொிவிக்கப்படுகின்றது
Spread the love