155
சர்ச்சைக்குரிய பென்டோரா பேப்பர்ஸ் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் கணவர் திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
பென்டோரா பேப்பர்ஸ் மூலம் இலங்கை பற்றி கசிந்த தகவல் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு பிறப்பித்த உத்தரவை அடுத்து குறித்த ஆவணங்களில் திருகுமார் நடேசனின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love