500, 2000 நாணயத்தாள்களில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தை நீக்க வேண்டும் எனக் கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினா் பரத்சிங் குந்தன்பூர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். மதுபானக் கடைகள் மற்றும் ஊழல் முறைகேட்டில் 500, 2000 நாணயத்தாள்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதால் அவற்றிலிருந்து மகாத்மா காந்தி படத்தை நீக்க வேண்டும் என அவா் கோாிக்கை விடுத்துள்ளாா்
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் :மகாத்மா காந்தி உண்மையை அடையாளப்படுத்துகிறார். அவரது படம் 500, 2000 ரூபாய் நாணயத்தாள்களிலும் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த நாணயத்தாள்கள் லஞ்சம் மற்றும்ஊழலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மதுபானக் கூடங்களிலும் இந்த நாணயத்தாள்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதுமகாத்மா காந்தியை அவமதிப்பதாகும்.
எனவே 500, 2000 ரூபாய்நாணயத்தாள்களில் இருந்து காந்தியின் உருவப் படத்தை நீக்க வேண்டும். ஏழைகள் பயன்படுத்தும் குறைந்த மதிப்பு நாணயத்தாள்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 500, 2000 ரூபாய் நாணயத்தாள்களில் காந்தியின் படத்துக்கு பதிலாக அவரது மூக்கு கண்ணாடியையும் அசோகச் சக்கரத்தையும் பயன்படுத்தலாம். என குறிப்பிட்டுள்ளாா்.