148
யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றிய 62 பேருக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 2 வருடங்களாக தற்காலிக சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றி வந்த 62 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது.
குறித்த நியமன கடிதங்கள் சுகாதார உதவியாளர்களுக்கு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
Spread the love