விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பான குற்றச்சாட்டுகளை உடனடியாக பாராளுமன்றத்துக்கு தெரிவிக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் கைச்சாத்திட்ட கடிதம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் அல்லது உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் தெரிவித்தார்.
இதேவேளை, ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால், உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியின் தலைமைச் செயலாளர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது