பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ள லெபனானில் தற்போது மின்சார உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் மிகப்பெரிய இரு மின் உற்பத்தி நிலையங்களான டெய்ர் அம்மர், ஸஹ்ரானி (Deir Ammar and Zahrani) ஆகியவற்றின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டது என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்ததாக ரொயிட்டர் செய்தி வௌியிட்டுள்ளது.
இதையடுத்து, மின் தொகுப்பு நேற்று (09.10.21) நண்பகலில் முற்றிலும் நின்றுபோனதாகவும் மேலும் பல நாட்களுக்கு குறித்த மின் நிலையங்கள் மீண்டும் செயற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 மாதங்களாக லெபனான் தீவிரமான பொருளாதார சிக்கல் மற்றும் எருபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளது. பொருளாதார பிரச்சினையால் அந்நாட்டின் பணப் பெறுமதி குறைவடைந்துள்ளது.
அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டு எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலைக்கு லெபனான் அரசு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.