!குளிர்காலத்தில் பரவுகின்ற சுவாசத் தொற்று நோய்கள் இந்த முறை மிகத்தீவிரமடைவதற்கு வாய்ப்புள்ளதாக அறிவியல் ஆலோசனைச் சபை(Scientific Council) எச்சரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டில் மிகவும் தணிந் திருந்த சளிச்சுரம் (influenza) மற்றும் ஆர்.எஸ்.வி(RSV – respiratory syncytial virus) ஆகிய இரண்டு சுவாசத் தொற்று வைர ஸ்கள் மீண்டும் இந்தக் குளிர் காலத்தில்தீவிரமாகப் பரவலாம் என்று அறிவியல்சபை கவலை வெளியிட்டிருக்கிறது.
சுவாசத் தொகுதியைத் தாக்குகின்றஆர்.எஸ்வி (respiratory syncytial virus)வைரஸ் இந்த ஆண்டு ஒக்ரோபர் – நவம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி – பெப்ரவரி வரை பெரிய அளவில் பரவலாம் என்று அறிவியல் ஆலோசனைச் சபைகடைசியாக வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்தவர்களை விட குழந்தைகளைஅதிகம் தாக்குகின்ற இந்த சுவாச நோய்க்குத் தடுப்பு மருந்து எதுவும் கிடையாது.சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளே அதன் தொற்றுக்களைக் குறைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாஸ்க் அணிதல், ஒருவரோடு ஒருவர்
நெருங்காமல் இடைவெளி பேணல், கைகளை அடிக்கடிச் சுத்திகரித்தல் போன்றசுகாதாரப் பழக்கங்கள் கொரோனா
வைரஸை மட்டுமன்றி தடிமன் காய்ச்சல்இருமல், தும்மல் என வேறு பல நோய்களுக்கான வைரஸ்களையும் கட்டுப்படுத்தியிருந்தன. அந்த சுகாதார விதிகள் தற்சமயம் முற்றாகக் கைவிடப்பட்டு விட்டன.
மக்களது நெருக்கமான செயற்பாடுகள்காரணமாக சுவாச நோய்கள் மீண்டும்தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.சளிக் காய்ச்சல் மற்றும் சுவாசக் குழாய்அழர்ச்சி போன்ற நோய்களால் அவதியுறுவோரது எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது என்பதை மருத்துவமனை வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. குறிப்பாக இரண்டு வயதுக் குக் குறைந்த குழந்தைகள் சுவாசக் குழாய் அழர்ச்சியால் (bronchiolitis) பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவுகளுக்குவருவது அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
———————————————————————-
குமாரதாஸன். பாரிஸ். 11-10-2021