151
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவன 5 நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று (12) இலங்கை செல்லவுள்ளார். பாதுகாப்பு படைகளின் தளபதி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் போில் இலங்கை செல்லும் அவா் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ, பாதுபாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதி ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய இராணுவத் தளபதி இந்திய – இலங்கை மித்ரசக்தி இராணுவ பயிற்சியின் இறுதி பயிற்சியையும் கண்காணிக்கவுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love