மூன்றுமுறை தேசிய விருது பெற்றவரும் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவருமான பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு(வயது 73,) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய நெடுமுடிவேணு, சினிமா மீது உள்ள ஆர்வத்தால் நாடகங்களில் நடித்து பின்னர் 1978ல் வெளிவந்த தம்பு படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானார்
மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழில் மோகமுள், இந்தியன், அந்நியன், சிலம்பாட்டம், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவா் 3 முறை தேசிய விருது, 6 முறை மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.
உடல்நலக்குறைவால் நேற்று ஞாயிறு அன்று திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் கொவிட் தொற்றில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது