164
இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சென்றுள்ளாா். . யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் சென்ற இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் யாழில் பல்வேறு தரப்பினரை நேரில் சந்தித்தார்.
அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சென்று வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியை சந்தித்தார்.
அதன் போது , வைத்திய சேவைகள் மற்றும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் , யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள அருங்காட்சியக கட்டட தொகுதியையும் பார்வையிட்டார்.
Spread the love