தங்களுடைய சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைக்குத் தீர்வாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ முன்வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
பிரதமருடனான நேற்றைய கலந்துரையாடல் தொடர்பில், இன்றையதினம் தீர்மானிப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், இன்று 31 தொழிற்சங்கங்கள் கலந்துக்கொண்டு இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது