Home சினிமா இனி பேச்சைக் குறைக்க முடிவு செய்துவிட்டேன்

இனி பேச்சைக் குறைக்க முடிவு செய்துவிட்டேன்

by admin

இனி பேச்சைக் குறைக்க முடிவு செய்துவிட்டதாக நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி என தொிவித்துள்ளார். சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, நடித்துள்ள விநோதய சித்தம் எனும் படத்தில் தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த், ஜெயப்பிரகாஷ், பாலாஜி மோகன், அசோக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதுடன் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அபிராமி ராமநாதன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்தப்படம் குறித்து கருத்து தொிவித்த போதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். விநோதய சித்தம்’ படத்தில் நடித்த பிறகு உளவியல் ரீதியாக தனக்குள் மாறுதல் ஏற்பட்டுள்ளது எனவும் . இனி பேச்சைக் குறைக்க முடிவு செய்துவிட்டேன். எனவும் தொிவித்துள்ளாா்.

மேலும் 18 ஆண்டுகளுக்கு முன்பு கே.பாலசந்தர் சாருடன் நாடகம் ஒன்று பார்த்தேன். அதிலிருந்து உருவானது தான் ‘விநோதய சித்தம். பாலுமகேந்திரா சார் சொன்னபடி ஒரு சாதாரண கதையை இயக்குநர் இயக்குவான். ஒரு நல்ல கதை இயக்குநரை இயக்கும். அதுபோல இந்தப் படம் எல்லோரையும் இயக்க வைத்து நல்ல படமாக வெளிவந்துள்ளது.

இந்த படம் பார்த்தால் கண்டிப்பாக உளவியல் ரீதியாகச் சிறு மாற்றத்தை உணர்வீர்கள். நான் படைத்த படைப்புகளில் இதுதான் சிறந்த படைப்பாக என் மனமார நம்புகிறேன் என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More