விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று உத்தரவிட்டார்.
வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பிலான வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் ஐந்தாவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ரிஷாட் பதியுதீன் வௌிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு மேலதிக நீதவான் தடை விதித்துள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.