முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பகுதியில், ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய 401 ரவைகளை வீட்டில் வைத்திருந்த 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக முல்லைத்தீவு காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
முல்லைத்தீவு பெருங்குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு குறித்த வீட்டில் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதை தொடர்ந்து நேற்றிரவு அந்த வீட்டினை சோதனை யிட்ட போது வீட்டு வளாகத்தில் ஒருதொகை துப்பாக்க ரவைகளை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
.கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயல் நிலத்தினை பண்படுத்தும் போது இந்த ரவைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் எதுவும் வழங்கப்படாத காரணத்தினால் வீட்டின் உரிமையாளரை கைதுசெய்துள்ள காவல்துறையினா் அவரை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தொிவித்துள்ளனா்.