சினிமா பிரதான செய்திகள்

அண்ணாத்த படப்பாடலுக்கு இசை வழங்கிய யாழ்ப்பாணத்தவா்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் பாடலொன்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் நாதஸ்வர இசை வழங்கியுள்ளாா்.

அண்ணாத்த திரைப்படத்திற்கு இசையமைக்கும், தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இந்த வாய்ப்பை குமரனுக்கு வழங்கியுள்ளார். தமிழகத்திலிருந்து நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த பஞ்சமூர்த்தி குமரனுக்கு இலங்கை கலைஞர்கள் வரவேற்பை வழங்கியிருந்தனா்்

சிவா இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளிக்கு வௌியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.