16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. .
ஓமனில் 6 லீக் போட்டிகளும் து. மற்றைய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.
தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.
முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியாவும் ‘பி’ பிரிவில் பங்களாதேஸ் , ஸ்கொட்லாந்து, ஓமான், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை போட்டியிட்ட பின்னா் , இரு பிரிவிலும் முதல் -2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1-ல் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியதீவுகள் மற்றும் இரு முதல் சுற்று அணிகள், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாடி முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும்.
உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். முதல் நாளான இன்று மஸ்கட்டில் நடைபெறவுள்ள இரண்டு லீக் போட்டிகளில் ஓமான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் முதலாவது போட்டியிலும் பங்களாதேஸ் மற்றும் ஸ்கொட்லாந்த் அணிகள் 2வது போட்டியிலும் விளையாடவுள்ளன.
2007-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டயில் . கடைசியாக 2016-ம் ஆண்டில் நடந்த போட்டியில் மேற்கிந்தியதீவுகள் அணி கிண்ணத்தினை வென்றிருந்தமை குறிப்பி்டத்தக்கது